யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள கோரிக்கை



யாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது அவசியம் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார் 


இன்றைய தினம் இராணுவத்தினரால் வடமராட்சியில் பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளை வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தற்போதைய கொரோணா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் 

தற்போது நாட்டில் கொரோணா  தொற்று மிகவும் வலுவடைந்து வருகின்றது அதேபோல வடக்கினை பொறுத்தவரைக்கும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாவண்ணம் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

யாழ்  மாவட்டத்தினை பொருத்தவரைக்கும் இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஒன்று விடத்தல் பளைதனிமைப்படுத்தல் முகாம் மற்றையது கோப்பாய்  தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாம் தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமிற்கு நேற்றைய தினம் கூட 108 பேர் தனிமைப் படுத்தலுக்கென கொண்டு வரப்பட்டுள்ளார்கள் 

எனவே  யாழ்ப்பாண மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொரோணா தொற்று ஏற்படாவண்ணம் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக வடக்கு மக்களுக்கு இன்னொரு அச்ச நிலைமை காணப்படுகின்றது தென்னிந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது 

அதிலும் குறிப்பாக படைத்துறை பருத்தித்துறையைச் சேர்ந்த மக்கள் தென்னிந்திய மீனவர்கள் மிகவும் இந்த விடயத்தில் கூடிய கரிசனை செலுத்த வேண்டும் எனவே தென் இலங்கை மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதால் நமக்கு வடபகுதியில் மாத்திரமல்ல இலங்கை ஊராகவும் இந்த கொரோணா தொற்றுமேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன இந்த விடயத்தில்  வடக்கு மக்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் எனவே ஏனைய மாவட்டங்களை போல் யாழ் மாவட்டத்தில் ஏற்படாவண்ணம் பொதுமக்கள் தாமாகவே கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்


0/Post a Comment/Comments

Previous Post Next Post