திருவையாறில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு கொழும்பில் இருந்து வந்த ஒருவரால் 43 குடும்பங்களைச் சேர்ந்த 169 பேர் தனிமைப்படுத்தப்பட்டதோடு மேலும் பலரை தேடும் முயற்சியில் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் இருந்து திருவையாறு மரண நிகழ்விற்கு வந்த மகளிற்கு கொரோனா உறுதி செய்த நிலையில் மரண நிகழ்விற்கு சென்ற அயலவர்கள் மரண வீட்டிற்கு சென்ற உறவினர்கனின் வீடு என இதுவரை பலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று இறுதிக் கிரிகைகள் மேற்கொள்ளப்பட்டபோது 7 பேர் மட்டுமே சடலத்தை எடுத்துச் செல்ல
சுகாதாரத் தரப்பினர் அனுமதி வழங்கினர். இறுதி நிகழ்விற்கு முன்னர் கொழும்பில் இருந்து வந்தவருடன் பழகியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேநேரம் கொழும்பில் இருந்து வருகை தந்தவர் கொழும்பில் இருந்து வவுனியா வந்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் கிளிநொச்சி வரை பயணித்து இரணைமடுச் சந்தியில் இறங்கி அங்கிருந்து நீல நிற முச்சக்கர வண்டியில் வீடு நோக்கிப் பயணித்துள்ளார். இதனால் நீல நிற முச்சக்கர வண்டி தேடப்படுவதோடு யாழ்ப்பாணம் தனியார் பேரூந்து அடையாளம் கானப்பட்டுள்ளது.
Post a Comment