நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மேற்படி ஆசிரியர் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டிருந்த்து.
இவ்வாறான நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்ற கொரோனா தாக்கத்தையடுத்து இந்தக் கல்லூரியை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த்து.
இதற்கமைய கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள மேற்படி கல்லூரியில் தற்போது கொரோனா சிகிச்சை வழங்கும் செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் குறித்த சிகிச்சை நிலையத்தில் இன்றையதினம் 18 கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 18 பேர் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே மருதங்கேணி வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இதன் தொடராகவே தற்போது கோப்பாய் கல்வியற் கல்லூரியும் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment