இந்தியன் 2 தாமதமாகுவதால் அடுத்த பிராமாண்டத்திற்கு தயாராகும் சங்கர் - Yarl Voice இந்தியன் 2 தாமதமாகுவதால் அடுத்த பிராமாண்டத்திற்கு தயாராகும் சங்கர் - Yarl Voice

இந்தியன் 2 தாமதமாகுவதால் அடுத்த பிராமாண்டத்திற்கு தயாராகும் சங்கர்


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் இயக்குனர் ஷங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறாராம்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால்இ இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். 

இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை தற்போது மீண்டும் தொடங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கிய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்இ ஷங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. லாக்டவுனில் இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை ஷங்கர் முடித்துவிட்டாராம். இப்படத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். 

மேலும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதுதவிர தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களையும் நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post