சூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்க உள்ளதாகவும்இ அது என்னென்ன படங்கள் என்பதையும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம்இ கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். சுதா கொங்கரா இயக்கி உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் தான் அடுத்ததாக நடிக்க உள்ள மூன்று படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அதன்படி முதலாவதாக மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தில் நடிக்க உள்ள சூர்யாஇ இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
இதன்பின்னர்இ வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். இப்படத்தை வி கிரியேசன்ஸ் எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
Post a Comment