வடக்கிலிருந்து 9 ஆயிரம் இளைஞர்களை புதிதாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை - Yarl Voice வடக்கிலிருந்து 9 ஆயிரம் இளைஞர்களை புதிதாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை - Yarl Voice

வடக்கிலிருந்து 9 ஆயிரம் இளைஞர்களை புதிதாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை




வடக்கு மாகாணத்தில் இருந்து 9 ஆயிரம் பேரை புதிதாக இராணுவத்தில் இணைக்கவுள்ளதாக இன்றைய ஆளுநர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 500 பேரும் வன்னிப் பகுதியில் இருந்து 4 ஆயிரத்து 5 00 பேருமாகவே இந்த 9 ஆயிரம் பேரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 

இராணுவ உதவிப் பணிகளாகவும் மரவேலை , மேசன் வேலை உள்ளிட்ட பணிகளாகவும் இவை அமையும் .

இவ்வாறு பணிக்கு அமர்த்தப்படுவோர் வடக்கு மாகாணத்திலேயே பணியாற்றும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதோடு மாதாந்தம் 60 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post