நல்லூர் கொரோனா தொற்றாளருடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தல் - Yarl Voice நல்லூர் கொரோனா தொற்றாளருடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தல் - Yarl Voice

நல்லூர் கொரோனா தொற்றாளருடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தல்




யாழ்ப்பானம் - நல்லூர் பகுதியில் கொரோனா  தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பை பேணியவர்கள், சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக சுய தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் குறித்த நபரிடம் தொடர்பினை
பேணினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மறவன்புலவு மற்றும் கைதடி - நாவற்குழி தெற்கு  பகுதிகளில் இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் கொரானா வைரஸ் தோற்று உறுதிப்படுத்தப்பட்ட  வர்த்தகரின், வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் 
பணியாளர்களின் குடும்பங்களில் இன்றைய தினம் சுயதனிமைப்படுத்தலுக்கு ட்படுத்தப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச சுகாதார உத்தியோகத்தர்கள் குறித்த வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டதற்கான அறிவுறுத்தல் ஸ்ரிக்கர்கள் இன்று ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post