முல்லையத்தீவில் யானையுடன் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு - Yarl Voice முல்லையத்தீவில் யானையுடன் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு - Yarl Voice

முல்லையத்தீவில் யானையுடன் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு


 

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகர் பகுதியில் இருந்து முதலாவது கிலோமீட்டர் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தச்சு வேலைக்காக முல்லைத்தீவு மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதிக்கு வந்து வேலை புரிந்து வந்த நிலையில் நேற்று (03) இரவு 10.15 மணி அளவில் தனது வேலையை நிறைவு செய்து வீட்டுக்கு திரும்புவதற்காக திரும்பி கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

இவ்வாறு கொடிகாமம் நோக்கி செல்வதற்காக பயணத்தை ஆரம்பித்த நபர் மாங்குளம் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூர தொலைவில் இரவு 10.30 மணியளவில் திடீரென வீதியை குறுக்கறுத்த யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளார்
இதனையடுத்து, யானையானது மோட்டார் சைக்கிள் மீதும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் மீதும் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 37 வயதுடைய 9 பிள்ளைகளின் தந்தையாகிய செட்டியாவெளி, பெரிய நாவலடி, கொடிகாமம், யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த ஆனந்தராசா விஜியானந்தன் என்ற நபரே உயிரிழந்துள்ளார். அவர் அண்மையிலேயே 9வது ஆண் பிள்ளைக்கு தந்தையானார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post