யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளிடத்தில் நேற்று மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தொடர்பிலும் கவணம் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சிறைக் கைதிகளிற்கு நேற்றைய தினம் பரிசோதனை இடம்பெற்றது.
இதன் அடிப்படையில் நேற்றைய தினம் முதல் கட்டமாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 60 கைதிகளிற்கு பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல் கலைக் கழகத்தில் சோதனைகள் இடம்பெற்றன. இவ்வாறு பரிசோதனை மேற்கொண்ட 60 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Post a Comment