வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக அச்சுவேலிப் பொலிசாரினால் மாவீரர் நாள் அனுஸ்டிப்புத் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் மாவீரர் நாள் அனுஸ்டிப்புத் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருக்கு தடை உத்தரவு ஒன்றினை வழங்குமாறு அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதன் பிரகாரம் B/1629/PC/2020 வழக்கு இலக்கத்தின்; கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றிற்கு சமூகமளிக்க வேண்டும் என்ற கட்டளை நீதிமன்ற கட்டளைப்படி பதிவாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாக அழைப்பாணை சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment