அச்சமி்ன்றி சமூக பொறுப்புடன் செயற்படுமாறு வடக்கு சுகாதார பணிப்பாளர் பொது மக்களிடம் கோரிக்கை - Yarl Voice அச்சமி்ன்றி சமூக பொறுப்புடன் செயற்படுமாறு வடக்கு சுகாதார பணிப்பாளர் பொது மக்களிடம் கோரிக்கை - Yarl Voice

அச்சமி்ன்றி சமூக பொறுப்புடன் செயற்படுமாறு வடக்கு சுகாதார பணிப்பாளர் பொது மக்களிடம் கோரிக்கை




கரவெட்டியிலுள்ள மனோகரா அல்வாயைச் சேர்ந்த ஓரே குடும்பத்திலுள்ள மூவருக்கு கொரோனா 
தொற்று கார்த்திகை 05 ம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்கள்;; கரவெட்டி மற்றும் 
அண்மைய பிரதேசங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு நபர்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் 
எனச் சந்தேகிக்கப்படுகின்றனர். 

இவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது இவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிற்குரிய 021 222 6666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு விபரங்களை அறியத்தரவும். 

இவ்விபரங்கள் தொடர்பான இரகசியத்தன்மை இறுக்கமாக 
பேணப்படும். இவர்கள் தொடர்பான விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்;களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை 
எடுத்துள்ளனர். 

இந்நோய் எமது மாவட்டத்தில்; பரவாதிருக்க அச்சமின்றி சமூக பொறுப்புணர்வுடன் உங்களின் தகவல்களை 
வழங்கி; ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்
வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post