யாழில் எங்களுக்கொரு சட்டம் உங்களுக்கொரு சட்டமா? மண்டபங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் கேள்வி - Yarl Voice யாழில் எங்களுக்கொரு சட்டம் உங்களுக்கொரு சட்டமா? மண்டபங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் கேள்வி - Yarl Voice

யாழில் எங்களுக்கொரு சட்டம் உங்களுக்கொரு சட்டமா? மண்டபங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் கேள்வி




யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எமது மண்டபங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் 50 பேரிற்கு மேல் பங்குகொண்டால் தடை எனக் கூறியவர்கள் தற்போது முழுமையாக தடை செய்தபின்பு தமது மண்டபத்தில் 300 பேருடன் கூட்டத்தை நடாத்தியமை எந்த வகையில் நியாயமானது என மண்டப உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உணவகங்களில் எவரும் அமர்ந்து உணவு உண்ண முடியாது என விதிக்கப்பட்ட தடையை சுகாதாரம் கருதி உணவக உரிமையாளர்கள் ஏற்று கடைப்பிடிப்பதனால் வழமையான வியாபாரம் பாதியாக குறைவடைந்முள்ளது. 

யாழ். நகரில் மட்டும் உணவகங்களில் பணியாற்றிய 200ற்கும் மேற்பட்டவர்களை உணவக உரிமையாளர்கள் இடை நிறுத்தியுள்ளனர். இன்னும் சில உணவகங்கள் முழுமையாகவே பூட்டங்ஙட்டு விட்டது.

இதேபோன்று மண்டபங்களில் பணியாற்றிய பல நூறு பணியாளர்கள் அதாவது சமையலாளர்கள் , மண்டப பராமரிப்பாளர்கள் என அனைவரும் தொழிலை இழந்து நிற்கின்றனர். 

இதற்கான அறிவுறுத்தலை வழங்கியவ்கள் , பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் ஒரே தடவையில் 200ற்கும் மேற்பட்டோர் அருகருகே அமர்ந்து 3 மணிநேரம் கலந்துரையாடுகின்றனர்.

அவ்வாறானால் சட்டம் ஒழுங்கு ஏழைகளிற்கு மட்டுமா அது அதிகாரிகளிற்கும் அரசியல்வாதிகளிற்கும் பொருந்தாதா . தினம் உழைத்து உண்பவன் வயித்தில் மண் அள்ளிப்போட்டு விட்டு அதிகாரிகள் குளு குளு அறையில் அளப்பறை நடாத்துகின்றனர். அதற்கும் மேலாக ஊரங்குச் சட்டம் உள்ள மாவட்டத்தில் இருந்தும் அதி பயங்கரமாக கொரோனா தொற்று உள்ளதாக கூறப்படும் மாவட்டத்தில் இருந்தும் வந்துள்ளனர்.

இவை அனைத்தும் இடம்பெறும்போது எமது சுகாதார அதிகாரிகள் அனைவரும் ஓடி ஓளித்து விட்டனர். அவர்கள் சென்ற பின்பு அதாவது கள்ளன் போன பின்பு விசுவா பொல்லை எடடா என நகரின் மத்தியில் வந்து நின்று படம் காட்டுவர் என ஆதங்கத்தை தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post