பாகிஸ்தான் ஆக்ரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பகுதிகள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அனுரக் ஸ்ரீவாத்சவா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரின் கில்ஜித் -பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து கொடுக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அனுராக் ஸ்ரீவாத்சவாஇ ' பாகிஸ்தானால் பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட கில்ஜித் -பல்திஸ்தானை உள்ளடக்கிய லடாக் மற்றும் ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் தான்.
ஆக்ரமிப்பு பகுதிகளில் அதிகாரம் செலுத்த பாகிஸ்தானுக்கு எந்த வித உரிமையும் இல்லை. கடந்த 70 ஆண்டுகளாக ஆக்ரமிப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கு எந்த வித அடிப்படை உரிமைகளையும் பாகிஸ்தான் வழங்கவில்லை. பாகிஸ்தான். இராணுவத்தின் பலவந்தத்தால் அங்கு மனித உரிமைகள் நசுக்கப்படுகின்றன' எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்துக்கள்இ சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இராணுவ அடக்குமுறைகளும் மனித உரிமை மீறல்களும் நடைபெறுவதாக ஐ.நா.மனித உரிமைக் குழுவிடம் இந்தியா முறைப்பாடு அளித்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.
Post a Comment