அரசியல் காழ்புணர்ச்சியினால் பழிவாங்கப்படுவதாக ஆதங்கம் வெளியிட்டுள்ள யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணண் எதிராளியையே காப்பாற்றுகின்ற அரசியல் நாகரிகத்தில் இருந்து வந்தவர்கள் ஒரு இளைஞனின் அரசியல் எதிர்காலத்தையே அழிக்கும் துரோகத்தை இழைப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ் மாநகர சபையின் உறுப்புரிமையிலிருந்து என்னை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக யாழ்ப்பாண தெரிவத்தாட்சி அலுவலரினால் தெரிவிக்கப்பட்டத்தற்கு எதிராக என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகர சபையின் உறுப்புரிமையில் இருந்து என்னை நீக்குகின்றதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு பின்னர் நான் சபை அமர்வுகளில் கலந்து கொள்;கிறேன். துரதிஸ்ரவசமாக என்னுடைய யாழ் மாநகர சபை உறுப்புரிமையை நான் காப்பாற்றுவதற்காக பல்வேறு பிரயத்தனங்களைச் செய்ய வேண்டியதொரு சூழல் ஏற்பட்டு விட்டது. இதுவொரு வருந்தப்பட வேண்டிய விடயமாகும்.
ஒரு இளம் அரசியல்வாதியான என்னுடைய அரசியலை நசுக்குவதற்கு பல தரப்புக்கள் முயற்சிகள் செய்கின்றன. முதலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னுடைய அரசியல் எதிர்காலத்தை அழிப்பதற்காக என்னுடைய மாநகர சபை உறுப்புரிமையை கேள்விக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் நான் காங்கிரசில் அல்லது முன்னணியில் இருந்த நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நடாத்தாமல் அந்த வழக்கை அவர்கள் கைவாங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து நான் எந்தக் கட்சியில் இருந்த போட்டியிட்டேனோ அந்தக் கட்சியினுடைய தலைவர்களே மீண்டும் நான் மாநகர சபைக்குச் செல்ல முடியாதவாறு செயற்படுவதென்பது மிகுந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பால் செய்யப்படுகின்ற ஒரு வேலையாகவே பார்க்கிறேன்.
உண்மையிலே மூத்த பல அரசியல் வாதிகளிடமிருந்த இவர்கள் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். நான் நினைக்கின்றேன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு எதிராக ஒரு வழக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அது உங்களுக்கு தெரியும். அதனை அமிர்தலிங்கம் ரயல்அட்பார் என்று சொல்லுவார்கள்.
அந்த வழக்கிலே எதிர்க்கட்சியிலே இருக்கக்கூடிய ஐP.ஐP. பொன்னம்பலம் நேரடியாக நீதிமன்றத்திற்காக சென்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்காக வழக்குப் பேசி அவரைக் காப்பாற்றியிருந்தார்.
இந்தவொரு அரசியல் நாகரிகத்தில் இருந்த வந்த நாங்கள் இன்று ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக ஒரு இளைஞனுடைய அரசியல் எதிர்காலத்தை நசுக்க வேண்டுமென்ற கபட நோக்கத்திற்காக எத்தகைய செய்பாட்டையும் செய்கின்ற ஒரு அரசியல் அநாகரிகம் இந்த மண்ணிலே அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
இதுவொரு வேதனையான விடயம். இது முப்பது ஆண்டுகலாக இந்த யுத்தத்தைச் சந்தித்து மிகப் பெரிய இழப்புக்களைச் சந்தித்த இந்தச் சமூகத்திற்கு இவர்கள் செய்கின்ற துரோகமாகத் தான் நான் இதனைப் பார்க்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment