சேர். பொன். இராமநாதனின் குருபூசை நிகழ்வு யாழ் பல்கலைக் கழகத்தில் - Yarl Voice சேர். பொன். இராமநாதனின் குருபூசை நிகழ்வு யாழ் பல்கலைக் கழகத்தில் - Yarl Voice

சேர். பொன். இராமநாதனின் குருபூசை நிகழ்வு யாழ் பல்கலைக் கழகத்தில்



பரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சபை, ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலய பரிபாலன சபை மற்றும் யாழ். பல்கலைக்கழக இந்து மன்றத்தினரின் ஏற்பாட்டில் சைவப் பெருவள்ளலாரும், பரமேஸ்வராக் கல்லூரியின் தாபகருமாகிய சேர். பொன். இராமநாதனின் 90 ஆவது குரு பூசை  யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. 

இன்றைய தினம் காலை 8 மணிக்கு பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பார்வதி சமேத பரமேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை, வழிபாடுகள் இடம்பெற்றதுடன்,

பல்கலைக்களகத்தினுள் இருக்கும் சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும், சபா மண்டபத்தில் உள்ள உருவப் படத்துக்கும் துணைவேந்தரினால் மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

குறித்த குருபூசைநிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ,பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைசார் தலைவர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post