சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா இல்லை - டெங்கு தாக்கமே காரணமென கண்டறியப்பட்டுள்ளது - Yarl Voice சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா இல்லை - டெங்கு தாக்கமே காரணமென கண்டறியப்பட்டுள்ளது - Yarl Voice

சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா இல்லை - டெங்கு தாக்கமே காரணமென கண்டறியப்பட்டுள்ளது




சாவகச்சேரி வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்தவரின் மரணத்திற்கு காரணம் டெங்கு என நேற்றைய தினம் கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் காச்சல் காரணமாக நேற்று முன்தினத் அதிகாலை உயிரிழந்தவர் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்தாரா என அச்சம் தெரிவிக்கப்பட்டு சடலம் உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இருந்தபோதும் உயிரிழந்தவரிற்கு கொரோனா இல்லை எனக் கண்டறியப்பட்டதனால் உயிரிழந்தவரின் சடலம் உறவுகளிடம் ஒப்படைப்பதற்காக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இவ்வாறு மேற்கோண்ட பிரேத பரிசோதனையின்போதே இறப்பிற்கு டெங்கு நோய்த் தாக்கமே காரணம் எனக் கண்டறியப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post