யாழ்ப்பாண நகரப் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது
யாழ்ப்பாண மாநகர முதல்வர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இணைந்துஇன்றைய தினம் யாழ் நகரிகொரோனா விழிப்புணர்வு செயற்பாடு,மற்றும் அரசினால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் நடைமுறைப்படுத்தினர்
குறித்த செயற்பாட்டின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள அனைத்து கடைகள்,பேருந்து நிலையம் நவீன சந்தை தொகுதி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியில் சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் அரசினால் வெளியிடப்பட்டுள்ள கொரோனூ கட்டுப்பாட்டு நடைமுறைகளை செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினர்
மேலும் மாநகர சட்ட விதிகளுக்கு முரணாக வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன ச குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்
Post a Comment