கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்கு சென்று கஞ்சா கடத்தி வந்த இருவர் நடுக்கடலில் வைத்து படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது..
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பல்வேறு நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதற்கமைய இலங்கை அரசாங்கமும் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்த போதும் சட்ட விரோதமாக இந்தியாவின் தமிழ்நாடடிற்கு சென்று கஞ்சா கடத்தி வந்தவர்கள் கடற்படையினரிடம் பிடிபட்டுள்ளனர்.
தமிழ் நாட்டிற்கு படகொன்றில் சென்று கஞ்சா கடத்தி வந்த போது கடற்படையினர் சுற்றிவளைத்து பிடித்து படகை சோதனை செய்த போது 98 பொதிகள் அடங்கிய ஒரு தொகுதி கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கமைய சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்கு சென்று கஞ்சா கடத்தி வந்த இருவரையும் படகுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
Post a Comment