வவுனியா வடக்கு கல்வி வலய நிதி மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை - Yarl Voice வவுனியா வடக்கு கல்வி வலய நிதி மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை - Yarl Voice

வவுனியா வடக்கு கல்வி வலய நிதி மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை




வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாணப் பணிப்பாளர் , கணக்காளர் வலயப் பணிப்பாளர் என்12 பேர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை வலயத்தில் உள்ளனர்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பணியாற்றிய முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் 21 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டமை வெளித் தெரிய வந்ததையடுத்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதே நேரம் மாகாணப் பிரதம செயலாளர் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றையும் நியமித்தார்.

இதனையடுத்து மாகாண ரீதியில் விசாரணை இடம்பெறும் அதேநேரம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , பணிப்பாளர் , கணக்காளர் ஆகியோருடன் வலயந்தின் கல்விப் பணிப்பாளர் , கணக்காளர் என கணக்கிற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் என மொத்தம் 12 பேர் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு இடம்பெற்ற விசாரணைகள் நேற்று முழுநாளும் இடம்பெற்றது.

இவ்வாறு நேற்றைய தினம் இடம்பெற்ற விசா்ணைகள் நிறைவு பெறாத நிலையில் இன்றைய தினமும் முன்னெடுப்பதற்காக அனைவரும் கொழும்பிலேயே மறிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்றைய தினமும் விசாரணைகள் இடம்பெறவுள்ளது. 

இன்றைய விசாரணைகளின் பின்பே இதன் இறுதி நிலவரங்கள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post