வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இன்று சிரமதானம் செய்யப்பட்டது.
இந்த சிரமதானப் பணிகளுக்கு இன்று காலை சென்ற போது படையினர் பொலிஸ் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
இதன் போது படையினர் பொலிஸாரால் பலத்த கெடுபிடிகள் ஏற்படுத்தப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதும் தடையை மீறி சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ள உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட மாவீர்ர்களின் உறவினர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு சிரமதானத்தை மேற்கொண்டிருந்தனர்.
Post a Comment