தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள்எ திர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஒருவர் நடுநிலை வகித்தார்.
அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் என 8 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இந்த நிலையில் தற்போது முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சீரமைத்து மீளவும் சபையில் முன்மொழியப்படவேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.
Post a Comment