மாவீரர் நினைவேந்தலை நடாத்த தடை விதிக்கக் கோரிய விண்ணப்பத்தை மீளப் பெற்ற போலீஸார் - ஸ்ரீகாந்தா விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice மாவீரர் நினைவேந்தலை நடாத்த தடை விதிக்கக் கோரிய விண்ணப்பத்தை மீளப் பெற்ற போலீஸார் - ஸ்ரீகாந்தா விடுத்துள்ள கோரிக்கை - Yarl Voice

மாவீரர் நினைவேந்தலை நடாத்த தடை விதிக்கக் கோரிய விண்ணப்பத்தை மீளப் பெற்ற போலீஸார் - ஸ்ரீகாந்தா விடுத்துள்ள கோரிக்கை



பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டதாக சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே என்.சிறிக்காதா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

இலங்கை குற்றவியல் நடபடி சட்டக்கோவை 106ஆம் பிரிவின்  பொதுத் தொல்லையின் கீழ் இந்த விண்ணப்பம் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டது.

எதிர் மனுதாரர்களாக நினைவேந்தலை நடாத்தும் ஒவ்வோருவர் உட்பட சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று மன்றில்  இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் பின்னர் விண்ணப்பத்தை மீளப்பெறுவதாக பொலிஸார் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் அடிப்படையில் போலீசார் இனியாவது இவ்வாறான நிகழ்வுகளை தடை செய்வதற்கான மனுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதை நிறுத்த வேண்டும்.

அதோடு ஏனைய நீதிமன்றங்களில் சமர்ப்பித்த மனுக்களையும் மீளப் பெறவேண்டும் குறித்த நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் பொலிஸார் சாதகமான முடிவினை பின்பற்ற வேண்டும்.

மேலும் மல்லாகம் நீதிமன்றில் குறித்த நினைவேந்தல் விடயம் தொடர்பில் நிபந்தனைகளுடன் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதே போல் எண்ணி அனைவரும் நீதிமன்றங்களிலும் பொலிஸார் தமது மனுக்களைப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வினை பொதுமக்கள் வீடுகளில் இருந்தவாறு அமைதியாக நினைவு கூறும் படி தீர்மானம் எடுத்துள்ளோம் எனினும் நாளுக்கு நாள் நாட்டில் முடிவுகள் மாறிக் கொண்டு வருவதன் காரணமாக நாளை மீண்டும் அனைத்து கட்சியினரும் ஒன்று கூடி பொது மக்களுக்கு என்ன அழைப்பு விடுவது என்பது தொடர்பில் ஆராய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post