அதிகரித்து வரும் அரச நில அபகரிப்பு, அரச நியமனங்களில் பாரபட்சம் மற்றும் அநீதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கென தம் சட்டப்புலமையைப் பயன்படுத்த விரும்பும் சட்டத்தரணிகள் கூட்டு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடியது.
வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமிருந்தும் வந்திருந்த சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் கூடியிருந்தனர்.
மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்கும் இயங்குநிலை சட்டத்தரணிகள் கூட்டாக ஒருமித்துச் செயற்படும் தீர்மானம் இன்றைய கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. திறந்த அமைப்பான இந்தக் கூட்டில் ஆர்வம் கொண்ட எந்தச் சட்டத்தரணியும் இணைந்து கொள்ள முடியும்.
Post a Comment