வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் பட்ஜெட் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள வலிகாமம்
மேற்கு பிரதேச பைநின் அமர்வு இன்று நடைபெற்றது.
இதன் போது சபையின் தவிசாளரால் வரவு செலவுத் திட்டம் சம்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றது.
இதன் பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஒருவர் மட்டும் வரவு செலவு எலவுத் திட்டத்தை எதிர்க்க ஏனைய அனைவரதும் ஆதரவுடன் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
25 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றது.
இங்கு கூட்டமைப்பில் 9, முன்னணியில் 6, ஈபிடிபி 4, ஐ.தே.க 3, சுயேட்கைக்குழு 2 உறுப்பினர்கள் என மொத்தமாக 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
ஆயினும் சபையின் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் மட்டும் எதிராக வாக்களித்தார். இதனால் 24 மேலதிக வாக்குகளால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
Post a Comment