சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்
தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்,தவறாக செயற்படுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார்
நான் ஒன்றைகேட்க விரும்புகின்றேன் நீங்கள் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது மக்களே உங்களுடைய குறைபாட்டை தாருங்கள் நான் அதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கிறேன் என்று சொன்னவர் நான் உட்பட பலர் கொடுத்த குறைபாடுகளு குப்பை கூடையில் போட்டாரோஎன தெரியவில்லை இப்பொழுது அரசியல் கைதிகளை விவகாரத்தை பற்றி பரிசீலிப்பதற்கு 9 மாதங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்
சுரேன் ராகவன் அவர்கள் விரும்பினால் வடக்கில் தேர்தலில் போட்டியிடலாம் மக்கள் ஆதரவு இருந்தால் வெல்லலாம் அல்லது ந உங்களுடைய பூர்வீகமான இடத்தில், கொழும்பில் போட்டியிடலாம்.அது அவருடைய விருப்பம்
எனினும்வடக்கு-கிழக்கு மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் இல்லாவிட்டால் அவரைப் பற்றி நாங்கள் இன்னும் பல விடயங்களை சொல்லவேண்டிவரும் அவருடன்நேரடியான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்
ஆகவே அவருடையவிமர்சன கருத்துக்களை இத்துடன் நிறுத்தவேண்டும் இதை நாங்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் ராகவனுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம் என்றார்.
Post a Comment