மாவீரர்களை நினைவு கூர ஸ்ரீதரனுக்கு தடை - நீதிமன்ற கட்டளையை வழங்கிய போலீஸ் - Yarl Voice மாவீரர்களை நினைவு கூர ஸ்ரீதரனுக்கு தடை - நீதிமன்ற கட்டளையை வழங்கிய போலீஸ் - Yarl Voice

மாவீரர்களை நினைவு கூர ஸ்ரீதரனுக்கு தடை - நீதிமன்ற கட்டளையை வழங்கிய போலீஸ்




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரக்கு மாவீரர்களை நினைவுகூர்வதற்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள  கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களை நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது  என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது


 மாவீரர் வாரம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை நேற்று வவுனியாவில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

இதேபோன்று இன்று(20.11.2020) கிளிநொச்சி அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி சென்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் காரியாலயத்தில் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679 /20 என்ற வழக்கின் பிரகாரம் 21.112020 தொடக்கம் 27.11.2020  வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வுகள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது மேற்படி கட்டளையை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜீவகஸ்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டளையை இன்று காங 9.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் அவர்களுக்கும் இன்று கிளிநொச்சி பொலிசாரினால் நீதிமன்ற தடையுத்தரவு கரைச்சி பிரதேச சபையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது

0/Post a Comment/Comments

Previous Post Next Post