தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள கரவெட்டி பிரதேச சபையில் உள்ள கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டுமென கட்சித் தலைமையினால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சபைத் தலைவரின் இராஐpனாமாவை கட்டி தற்போது ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
கரவெட்டி பிரதேச சபைத் தவிசாளர் தனது பதவியில் இருந்து விலகுவதாக விடுத்த அறிவிப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..
யாழ். கரவெட்டி பிரதேச சபையில் சில காலமாக தவிசாளருக்கும் சில உறுப்பினர்களுக்கும் இடையில் சில முரண்பாடு இருந்து வந்திருக்கிறது. அது சம்மந்தமாக அவர்கள் இரு சாராரும் எங்களுடைய உடுப்பிட்டிக் கிளைத் தொகுதியினரும் தலைவருடனும் பேசியிரக்கின்றனர். பொதுவாக உள்ளுராட்சி சம்மந்தமான விடயங்களைக் கையாண்டு வந்திருக்கிறதால் என்னோடும் பேசியிருக்கின்றார்கள்.
அதனடிப்படையில் அந்த விடயம் சம்மந்தமாக அந்தப் பிரதேச சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 9 பேரையும் அழைத்து கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் கூட்டம் நடாத்தினோம். அதில் வரவு செலவு திட்டத்தை அங்கீகரிப்பது கட்டாயமானது என்பதை வலியுறுத்தியிருந்தோம்.
மேலும் சபையில் வரவு செலவுத் திட்டம் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டாலும் கட்சியினுடையது என்ற காரணத்தினாலே எந்தச் சந்தர்ப்பத்திலும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அது தனிநபருடைய தோல்வி அல்ல என்பதையும் அது கட்சியினுடைய தோல்வியாகவே பார்க்கப்படும் என்பதால் அதற்கு ஆதரவாகவே வாக்களிக்க வேண்டுமென்று அனைத்து உறுப்பினர்களுக்கும் சொல்லப்பட்டுள்ளது.
ஆகவே அந்தந்த தவிசாளர்கள் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்து பேசி அங்கீகரிக்கக் கூடிய வாய்ப்பு இருந்தால் அவர்கள் அதனைச் செய்யலாம். அந்த நிலைமைகள் எல்லாம் பரிசீலித்து தான் அவருடைய இராஐpனாமா மேல் நடவடிக்கைகள் பற்றி தீர்மானிப்போம். இப்போது இராஐpனாமா செய்வதென்பது இல்லை. ஆக அவர் ஒரு கடிதம் வழங்கியிருக்கிறார். அது எங்களிடம் தற்பொது இருக்கிறது. ஆக அவ்வளவு தான் இப்போது இருக்கக் கூடிய நிலைமை என்றார்.
Post a Comment