தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுப் பல்வேறு இடங்களிலும் மரநடுகையை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை
எழுதுமட்டுவாழில் வீதியோர மரநடுகையை மேற்கொண்டுள்ளது.
எழுதுமட்டுவாழ் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்;தின் செயலாளர் ச. கஜேந்திரநாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தமிழ்த்
தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொதுச்செயலாளர் ம. கஜேந்திரன், சூழல் பாதுகாப்பு
அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ் ஆகியோருடன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
மரக்கன்கறுகளுக்குப் பாதுகாப்புக் கூடுகள் அமைத்து தொடர்ந்து பராமரிக்கும் பொறுப்பை எழுதுமட்டுவாழ் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
Post a Comment