அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன்இ 290 தொகுதிகளை கைப்பற்றி 46வது ஜனாதிபதியாகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகவும் பதவியேற்கவுள்ளனர்.
இந்நிலையில்இ அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கும்இ துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கும் ஏனைய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் ஜோ பிடனுக்கு தனது ருவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது 'வரலாற்று ரீதியிலான உங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஜனாதிபதி ஜோ பிடன்.
மேலும் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உங்களுடன் பணியாற்ற எதிர்பார்க்கின்றேன்' என பதிவேற்றியுள்ளார்.
Post a Comment