யாழ் நகர கடற்கரை குடியிருப்புகளில் கடல் நீர் உட்புகுந்ததால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு - Yarl Voice யாழ் நகர கடற்கரை குடியிருப்புகளில் கடல் நீர் உட்புகுந்ததால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு - Yarl Voice

யாழ் நகர கடற்கரை குடியிருப்புகளில் கடல் நீர் உட்புகுந்ததால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு



யாழ். மாநகர சபை எல்லைக்குற்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின், வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் 85குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுட்குப்பட்ட கொழும்புத்துறை ஜெ 161 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள , எழிலூர், மகேந்திரபுரம் கிராமங்களில், சுமார் 50 குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3 குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு  இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்தோடு ஜெ 68 கிராம உத்தியோகத்தர் பிரிவில், தொடர்மாடி அருகாமை கிழக்கு பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளுக்கு யாழ் மாட்ட அனர்தத்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.சூரியராஜா பார்வையிட்டுள்ளளார்.

அத்தோடு யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் குறித்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post