தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடத்தில் மாற்றங்கள் ஏற்படுவது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ள கடற்தொழில் அமைச்சரும் ஈபீடிபியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா கடந்த கால தவறுகளை அவர்கள் உணர்ந்து செயற்படுவதனை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் அமைச்சர் கலந்து கொள்ளும் அபிவிருத்தி கூட்டங்களில் தமிழ்க் கட்சிகளின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வது தொடர்பில் ஊடக சந்திப்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
யுhழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் செயற்பாடகள் என்பன தொடர்பில் ஆராயும் விசேட கூட்டங்கள் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அரசின் அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த்து.
இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிஇ தமிழ் மக்கள் தேசிய கூட்டனி ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்புனர்கள் வருகை தந்திருந்தனர். அவ்வாறு இந்தக் கூட்டஙிகளிற்கு அவர்கள் வருகை தந்த விடய்ம் வரவேற்கதக்கது. ஆயினும் இந்தக் கட்சிகளுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்து இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
அவ்வாறு வேறு வேறு அரசியல் நோக்கங்கள் இருந்தாலும் மக்களுடைய பிரச்சனைகள் தேவைகள் என்ற விடயத்தில் கட்சி போதங்களுக்கு அப்பால் அனைவரும் கலந்து கொண்டு தெளிவை பெற்றிருக்கின்றனர். கடந்த ஆட்சிக் காலங்களில் அரச அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டஙகளில்; அழைப்பு விடுக்கப்பட்டாலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர்.
ஆனால் கடந்த காலங்களில் தாம் இழைத்த தவறுகளை உணந்து கொண்டு தற்போது இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. ஆகவே இவர்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை உணர்ந்து இத்தைய முடிவுகளை எடுத்திதிருப்பதாகவே நினைக்கிறேன் என்றார்.
Post a Comment