தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மரநடுகை - Yarl Voice தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மரநடுகை - Yarl Voice

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மரநடுகை




தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் வடமாகாண மரநடுகை மாதச் செயற்பாடுகளில் ஒன்றாக நேற்று ஞாயிற்றுக்கிழமை வாதரவத்தை வீரவாணியின் உள்ள வீதிகளில் இலுப்பை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

 வீரவாணி சமூக அபிவிருத்திக் குழுவைச் சேர்ந்த திரு. யோகநாதன் யகேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் ,பொருளாளர் க. கேதீஸ்வரநாதன், சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் ஆகியோருடன் கிராமத்து இளைஞர்களும் பங்கேற்றிருந்தனர். 

நடுகை செய்யப்பட்ட 100 மரக்கன்றுகளையும் பராமரிக்கும் பொறுப்பை வீரவாணி சமூக அபிவிருத்திக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. இக் குழுவுக்கும் கிராமத்தவர்களுக்கும் இயற்கை என்ற பேரிறைவனின் ஆசி எப்போதும் கிடைப்பதாக.

0/Post a Comment/Comments

Previous Post Next Post