எங்களை விமர்சிக்க சுரேன் இராகவனுக்கு எந்த தகுதியும் கிடையாது - சிவஞானம் - Yarl Voice எங்களை விமர்சிக்க சுரேன் இராகவனுக்கு எந்த தகுதியும் கிடையாது - சிவஞானம் - Yarl Voice

எங்களை விமர்சிக்க சுரேன் இராகவனுக்கு எந்த தகுதியும் கிடையாது - சிவஞானம்




தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சுரேன் ராகவன் அவர்கள் முன்னர் வடக்கு மாகாண ஆளுநராக இருந்தவர் இப்பொழுது பல விடயங்கள் பேசுகின்றார்.  குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசுகின்றார். நீதி அமைச்சரை  கேள்வி கேட்கின்றார்.

அவர் இதையெல்லாம் வடக்கு ஆளுநராக இருக்கின்ற பொழுது மட்டுமல்ல அவர் மைத்திரிபால சிறிசேன வினுடைய  ஆள் அவர் ஜனாதிபதியாக இருக்கின்ற பொழுது இதை செய்திருக்கலாம் அதை விடுத்து மைத்திரி பால சிறீசேனவின்  முகவராக இருந்துவிட்டு இப்போது அதைப் பற்றி இன்னொரு ஆட்சி வந்த பிறகு பேசுவது தமிழ் மக்களை ஒரு ஒருவகையில் ஏமாற்றும்வேலை யாகவே நாங்கள் பார்க்கின்றோம் 

 அவர் இந்த அரசாங்கத்தினுடைய நியமன பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய அரசியல் கைதிகள் விடுதலைபற்றி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் பேசலாம்.

 ஆனால் எங்களுடைய வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த  அரசியல்வாதிகளுடைய செயற்பாட்டை விமர்சிப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது அவர் அவ்வாறு பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் அவர் தமிழர் என்பதால் அவர் மீது மக்கள் வைத்துள்ள மதிப்பினை அவர் குறைத்துக் கொள்ளக்கூடாது.

 எங்களைப் பற்றி விமர்சிக்கக் கூடாது எங்களுடைய தலைவர்களைப் பற்றி விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post