யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் நடாத்த முடியாது என பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எழுத்தில் வழங்கிய பின்பும் அதனை மீறியே நேற்றைய கூட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாநகர எல்லைப் பகுதிக்குள் கலியாண மண்டபங்கள் , உணவகங்கள் , பேரூந்துகளிற்கு மட்டும் கட்டுப்பாடு விதித்துவிட்டு அதனை தடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் , அரசியல்வாதிகள் 200ற்கும் மேற்பட்டோர் மாவட்டச் செயலகத்தில் ஒன்றுகூடும்போது சுகாதார வைத்திய அதிகாரி உறக்கத்தில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுவது தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் வைத்திய அதிகாரி மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் இதனை நடாத்த முடியாது என்பது உண்மை அதற்கான வழிகாட்டலை சுகாதாரத் திணைக்களத்திற்கும் தெரிவித்து மாவட்டச் செயலாளருக்கும் எழுத்தில் அறிவித்தேன். இத்தனை பணிகளையும் மீறி கூட்டம் இடம்பெற்றது மட்டுமன்றி எமக்கு ஆலோசணை வழங்கும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இவற்றின் அடிப்படையில் எனது அதிகார எல்லைக்குள் நான் ஆற்றவேண்டிய பணியை ஆற்றினேன். எனப் பதிலளித்தார்.
Post a Comment