கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் திருடர்கள் கைவரிசை - யாழ் நகரில் மூன்று கடைகளில் திருட்டு - Yarl Voice கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் திருடர்கள் கைவரிசை - யாழ் நகரில் மூன்று கடைகளில் திருட்டு - Yarl Voice

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் திருடர்கள் கைவரிசை - யாழ் நகரில் மூன்று கடைகளில் திருட்டு




யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள மூன்று கடைகள் நேற்று அதிகாலைவேளையில் உடைத்து பல லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.

கஸ்தூரியார் வீதியில் உள்ள ஒரு நகை  கடை, துவிச்ச்கர வண்டி விற்பனை நிலையம் என்பவற்றுடன் ஓர் களஞ்சியமும் இவ்வாறு உடைக்கப்பட்டுள் உடைக்கப்பட்டுள்ளது.

இரு கடைகளின் மேற்பகுதியை பிரித்து உள் இறங்கிய திருடர் கூட்டம் துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையந்தில் நேற்றைய விற்பனைப் பணம் வங்கியில் வைப்புச் செய்வதற்கு தயாரக இருந்த நிலையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபா களவாடப்பட்டுள்ளது.

இதேபோன்று நகை கடையின் கூரையை பிரித்து உள் இறங்கிய திருடர்கள் அங்கிருந்த நகைகள் அயன்சேவ்வில் இருந்தமையினால் தப்பியபோதும் வெளியில் இருந்த கால் பவுண் நகையும் குபேரன் முன்பாக  இருந்த ஒரு தொகை பணமும்  கொள்ளையிடப்பட்டுள்ளது.

 முன்றாவது களஞ்சியத்தின் பின் கதவு உடைக்க முற்பட்டபோதும் எவையும் களவாடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

களவாடப்பட்ட இரு வர்த்தக நிலையங்களிலும் சீ.சி.ரி கமரா பொருத்தப்பட்டுள்ளபோதும் இரவு மின் இணைப்பை நிறுத்திச் சென்றதனால் அவற்றில் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இவை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டினையடுத்து தடயவியல் பொலிசார் சகிதம் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகநேற்

0/Post a Comment/Comments

Previous Post Next Post