புதுமணத் தம்பதிகளிடம் சங்கிலி அறுத்த சம்பவமொன்று நெல்லியடி மதவடிப் பகுதியல் இன்று இடம்பெற்றுள்ளது.
தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டதிற்காக நெல்லியடி நகரில் புடவை வாங்கி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
நெல்லியடியில் இருந்து மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த புதுமணத் தம்பதிகளை, இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இருவர், ஆள் நடமாட்டமற்ற இரும்பு மதவடிப்பகுதியில் வைத்து பெண்ணின் கழுத்தில் இருந்த ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர்.
Post a Comment