யாழில் பெய்யும் தொடர் மழையால் பல குடும்பங்கள் பாதிப்பு - Yarl Voice யாழில் பெய்யும் தொடர் மழையால் பல குடும்பங்கள் பாதிப்பு - Yarl Voice

யாழில் பெய்யும் தொடர் மழையால் பல குடும்பங்கள் பாதிப்பு




கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 22 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்..

கடந்த 15 ம் திகதியிலிருந்து இன்றைய தினம் வஇலரை யாழ்ப்பாண மாவட்டத்தில்  காணப்பட்ட  காற்றுடன் கூடிய மழையின் தாக்கத்தின் காரணமாக 22குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 16  வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும்  

 நல்லூர், கோப்பாய் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய்,கரவெட்டி ,பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  பாதிப்புகள் தொடர்பான  விவரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்டஅனர்த்தமுகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post