நடிகர் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிறந்தநாளைக் கொண்டாடும்போது கண் கலங்கினார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும்இ பாடகி சுசித்ராவும் இணைந்தனர். ரேகாஇ பாடகர் வேல் முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இன்று கமல் தனது பிறந்தநாளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்டாடினார். போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து கமலுக்கு சிறப்பு கேக் செய்து அனுப்பினார்கள். மேலும் அவரது பாடல்களை போட்டியாளர்கள் பாடி வாழ்த்து கூறினார்கள்.
இதை கேட்ட கமல் நீங்கள் பாடும் போது எனக்கு 2 பேர் ஞாபகம் வருகிறார்கள். ஒருவர் இளையராஜா மற்றொருவர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள். கடந்த சில வருடங்களாக எஸ்பிபி தொடர்ந்து என்னுடைய பிறந்தநாளுக்கு என்னை சந்தித்து வாழ்த்து சொல்லுவார். ஆனால் இந்த வருடம் சொல்ல முடியவில்லை.
கடந்த வருடம் என்னை அவர் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் வாய்ஸ் மூலம் எனக்கு வாழ்த்து சொன்னார். அந்த வாழ்த்து இன்று நான் கேட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை இந்த வார்த்தையை கேட்டு கொண்டே இருப்பேன். என்றார்.
Post a Comment