நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை யாக்கரு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளது.
வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை-யாக்கரு வயல் வெளியில் அமைந்துள்ள பற்றைக்காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தில் இருந்து 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் துன்னாலை பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment