யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் - Yarl Voice யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் - Yarl Voice

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்



யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்கூடத்தில் 248 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

வடமாகாணத்தில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களாக உறுதிப் படுத்தப்பட்டவர்கள்.

மேற்படி மூவரும் பேலியகொடை மீன் சந்தை பகுதிக்கு சென்று வந்ததன் காரணமாக தொற்று உறுதி செய்யப்பட்டு  சிகிச்சை பெறுபவரின் உறவினர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#  இது தவிர ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள்  தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் செய்யப்பட்ட பரிசோதனையில்  3 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

..........

0/Post a Comment/Comments

Previous Post Next Post