தடைகளைத் தாண்டியும் மாவீர்ர் நாள் நினைவேந்தலை நடத்தப்பட வேண்டும் - ஓரணியில் திரள சிவாஜிலிங்கம் அழைப்பு - Yarl Voice தடைகளைத் தாண்டியும் மாவீர்ர் நாள் நினைவேந்தலை நடத்தப்பட வேண்டும் - ஓரணியில் திரள சிவாஜிலிங்கம் அழைப்பு - Yarl Voice

தடைகளைத் தாண்டியும் மாவீர்ர் நாள் நினைவேந்தலை நடத்தப்பட வேண்டும் - ஓரணியில் திரள சிவாஜிலிங்கம் அழைப்பு



எதிர்வரும் நவம்பர் 27மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு  நாம் யாரிடமும் அனுமதிபெற தேவையில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

.யாழில் இன்று  நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்ததாவது..

 உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதனை யாரும் தடுக்க முடியாது .அதே போல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறதேவையில்லை.

 எனவே எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமைபோல் இடம்பெறும்எத் தடை வரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று கூடி இந்த மாவீரர் தின நிகழ்வை வழமைபோன்று நடத்துவோம் தம்மை கைது செய்தால் கைது செய்யட்டும் ஆனால் மாவீரர் தின நிகழ்வை  நடாத்துவோம் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post