நியூமகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் மற்றும் மருத்துவர் சிவரூபன் உள்ளிட்ட 15 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றிற்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைவரையும் மட்டக்களப்பு கந்தகாடு சிகிச்சை நிலையத்திற்கு இன்று மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நியூமகசீன் சிறைச்சாலையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினையடுத்து தமிழ் அரசியல் கைதிகளிடையே அச்சநிலை தோன்றியிருந்தது.
தற்போதைய சூழலை கருதியேனும் தம்மை பிணையில் வீடு செல்ல அனுமதிக்குமாறு அரசியல் கைதிகள் கோரியிருந்த போதும் அரசு கண்டுகொண்டிருக்கவில்லை.
இந்நிலையில் வவுனியா மேல்நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்; யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசனிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது.
சுpறையில் ஒரே அறையினுள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவர் சிவரூபன் உள்ளிட்ட 15பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
Post a Comment