யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மருதனாமடம் சந்தையில் ஒருவருக்கு கோரனா ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த சந்தை வர்தகர்கள் உட்பட பல்வேறு சந்தை வர்த்தகர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் பிசிஆர் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டிருநதது.
இதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது சங்கானை 4, உடுவில் 1,
பண்டத்தரிப்பு 1, மானிப்பாய் 1
வடலியடைப்பு 1 என இன்றைய தினம் மொத்தமாக 8 வர்த்தகர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment