மருதனார்மடம் பொதுச் சந்தை கோரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 11பேருக்கு கோவிட் - 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (டிசெ. 19 சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரத் தொடர்புடைய 11 பேருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 பேர்உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இரண்டு பேர் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவர் , இளவாளை ,மல்லாகம்,அளவெட்டி பகுதிகளை சேர்ந்த ஒருவர்எனவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 110 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 104 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் முல்லேரியா ஆய்வுகூடத்தில் சோதனைக்கு உள்படுத்தியோரில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 435 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. அதில்யாழில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Post a Comment