புரெவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் உயிரிழந்த சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமாரின் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணம் தங்க நட்சத்திர லயன்ஸ் கழகம் உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது.
இந்தக் குடும்பத்திற்கு மேற்படி லயன்ஸ் கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் பெறுமதியான புதிய வீடு ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.
குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதி நிலையில் உள்ள மேற்படி குடும்பத்தின் நிலை அறிந்த யாழ். தங்க நட்சத்திர லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் நேற்று (15) செவ்வாய்க்கிழமை இவர்களின் இருப்பிடத்திற்கு வருகைதந்தனர்.
சிறிய கொட்டில் ஒன்றில் வசிக்கும் மேற்படி குடும்பத்திற்கும் அவர்களோடு வசிக்கும் ஏனைய இரு குடும்பங்களுக்கும் உலருணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்கள் என 15 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை வழங்கினர்.
இதன்போது இவர்களின் நிலையைக் கேட்டறிந்த மேற்படி லயன்ஸ் பிரதிநிதிகள், இவர்களுக்கு பெறுமதியான வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்தனர்.
Post a Comment