யாழ்ப்பாணத்தில் இன்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய 120 பேருக்கான பரிசோதனை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment