யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நண்பகல் 12 மணியளவில் குறித்த இடம்பெற்றுள்ளது.
நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய திசையில் பயணித்த கார் ஒன்று அந்த வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் மூவரும் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment