ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் இரண்டாவது கட்ட நியமனம் வழங்கும் வகையில் உறுதி செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ளவர்களில் அநேகர் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்காத பலர் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்படுகின்றது.
நாடு முழுவதும் உள்ள வேலை வாய்ப்பற்ற அரச தொழில் புரியாத குடும்பங்களில் இருந்து மிகவும் வறுமையானவர்களிற்கு அரச நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் பெயரில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பம் கோரப்பட்டு விண்ணப்பதாரிகளிற்கு நேர்முகத் தேர்வும் இடம்பெற்றது. அதில் கூடிய புள்ளிகளைப் பெற்றவர்கள் நியமனம் கிடைக்கும் என நம்பி காத்திருக்கின்றனர்.
இரண்டாம் கட்ட நியமனத்திற்காக பலரின் விண்ணப்பம் செயலணியினால் கடந்த வாரம் மாவட்டச் செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானவை புதிய விண்ணப்பங்களாகவே காணப்படுகின்றதோடு சில பழையவையாகவும் உள்ளது. இதனால் ஏற்கனவே விண்ணப்பித்து தேர்வில் முதல் நிலை பெற்றவர்கள் ஓரம்கட்டப்பட்டு அரசியல் கட்சிகளின் செல்வாக்குப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியல்களில் யாரின் சிவார்சில் வருபவர்கள் என்பவை பென்சிலினால் எழுதப்பட்டே அனுப்பப்படுகின்றது. இவ்வாறு அனுப்பி உள்ள பட்டியல்கள் ஆளும் அரசிற்கு யாழில் ஆதரவளிக்கும் இரு அரசியல் கட்சிகளின் சிபார்சின் பெயரிலேயே புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஏற்கனவே விண்ணப்பித்து நேர்முகத் தேர்விற்கு தோற்றிய பலர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Post a Comment