யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இருவருக்குமாக வட பகுதியில் மூவருக்கு இறு செவ்வாய்க்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 412 பேருக்கு நேற்று பரிசேதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தப் பரிசொதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் யாழ்ப்பாணம் உரும்பிராயப் பகுதியில் ஒருவருக்கும் கிளிநொச்சியில் பாரதிபுரும் பகுதியில் இருவருக்குமாக வடக்கில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதே வேளையில் முழங்காவில் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 124 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையல் எவருக்கும் தொற்று இல்லை என பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment