நாளை இடம்பெறவுள்ள யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இமானுவேல் ஆனோல்டினைமுதல்வர் தெரிவுக்கு நியமிப்பதாக இன்றைய தினம் தமிழ் தேசியகூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்றைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின்யாழ்ப்பாண அலுவலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.
நாளை காலை ஒன்பது முப்பது மணி அளவில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் தெரிவு இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment